ரஜினி பட இயக்குனரின் திரைப்படத்தில் நடிகர் சிவா?!

  • August 20, 2020 / 01:57 PM IST

2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான “சென்னை-28” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சிவா. அதிகமாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ்த்திரையுலகில் பெற்றுள்ளார்.

கடைசியாக “கலகலப்பு 2” மற்றும் “தமிழ் படம் 2” ஆகிய படங்களில் நடித்திருந்த சிவா தற்போது ரஜினியின் சூப்பர் ஹிட் படமான “பாட்ஷா” படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

சுமார் எட்டு வருடங்களாக இயக்கத்திலிருந்து தள்ளியிருந்த சுரேஷ்கிருஷ்ணா தற்போது மீண்டும் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் மேலும் இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை அஞ்சலியை நடிப்பதற்காக கேட்டு வருவதாகவும் செய்தி வந்துள்ளது.

இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இதற்கு முன்னர் பாபா, ஆளவந்தான், சங்கமம், பாட்ஷா, அண்ணாமலை, சத்யா போன்ற வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்துள்ளார். கடைசியாக 2011ம் ஆண்டு வெளியான “இளைஞன்” என்ற படத்தை இவர்தான் இயக்கியிருந்தார்.

தற்போது மீண்டும் களம் இறங்கப் போகும் இவர் சிவாவை வைத்து படம் இயக்க போவதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. ஏற்கனவே சிவா “சுமோ” மற்றும் “பார்ட்டி” ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus