” எப்போதுமே சிரிச்ச முகத்தோட இருப்பாரு, அருமையான மனிதர்”… சரத்பாபுவின் மறைவு குறித்து உருக்கமாக பேசிய ரஜினி!
May 23, 2023 / 03:52 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சரத்பாபு. இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் ‘பட்டினப்பிரவேசம்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு பிறகு சரத்பாபு ‘நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக்கிள்ளாதே, நெற்றிக்கண், பகல் நிலவு, வேலைக்காரன், அண்ணாமலை, டூயட், முத்து, லவ் பேர்ட்ஸ், ஆளவந்தான், பாபா, புதிய கீதை, ஒற்றன், அருள், கஜேந்திரா, பேரரசு’ போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார்.
இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு (வயது 71) நேற்று இயற்கை எய்தினார். தற்போது, சரத்பாபுவின் உடலுக்கு கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.
அப்போது ரஜினி பேசுகையில் “நான் நடிகராவதற்கு முன்பு இருந்தே சரத்பாபுவை எனக்கு தெரியும். அவர் எனக்கு நல்ல நண்பர், ரொம்ப அருமையான மனிதர். அவர் எப்போதுமே சிரிச்ச முகத்தோட தான் இருப்பாரு. அவர் கோபமாக இருந்து நான் பார்த்ததே கிடையாது. நானும் அவரும் சேர்ந்து நடிச்ச ‘முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து, வேலைக்காரன்’ என எல்லா படங்களுமே சூப்பர் ஹிட்டாச்சு.
என்மேல அவர் அளவுகடந்த அன்பு வச்சிருந்தாரு. எப்பவுமே நான் சிகரெட் பிடிக்குறதை பார்த்து ரொம்ப வருத்தப்படுவாரு. சிகரெட்டை நிறுத்து, நீ உடம்பை கெடுத்துக்க வேண்டாம், நீ ரொம்ப நாள் வாழனும்ன்னு சொல்வாரு. சோ, நான் அவர் முன்னால சிகரெட் பிடிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus