தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா, 2014-ஆம் ஆண்டு வெளியான ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கினார்.
இதில் அவரது தந்தை ரஜினிகாந்தே நடித்திருந்தார். ‘கோச்சடையான்’ படத்துக்கு பிறகு ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார். 2010-யில் அஷ்வின் என்பவரை திருமணம் செய்த சௌந்தர்யா, அவரை 2017-யில் விவாகரத்து செய்துவிட்டு 2019-ஆம் ஆண்டு விஷாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே, சௌந்தர்யா – அஷ்வின் தம்பதியினருக்கு வேத் என்ற மகன் இருக்கிறார். கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் விஷாகன் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ‘வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி’ என்று பெயர் சூட்டப்பட்டது.
தற்போது, இக்குழந்தையின் காதுகுத்து விழா கோவை சூலூர் பகுதியில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் அவரது மனைவி லதாவும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் எடுத்த ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.