தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதில் கன்னட நடிகர் ஷிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். கெஸ்ட் ரோலில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன்லால் நடிக்கிறார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட GLIMPSE படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. தற்போது, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற ஜூலை மாதம் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடத்த ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.