ரஜினி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்கள்!

  • July 29, 2023 / 11:01 AM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்கியுள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் கன்னட நடிகர் ஷிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். கெஸ்ட் ரோலில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன்லால் நடித்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட GLIMPSE மற்றும் 3 பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus