தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்கியுள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதில் கன்னட நடிகர் ஷிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். கெஸ்ட் ரோலில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன்லால் நடித்துள்ளார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தை பார்த்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ட்விட்டரில் “படம் நன்றாக இல்லை” என்று குறிப்பிட்டதுடன் 5-க்கு 2 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே கொடுத்துள்ளார்.
First Review #Jailer :
Typical Action Saga with “ Stupid ” Stunts by Grandpa #Rajinikanth. He is looking Worst in movie. Boring Black Comedy Story & Screenplay. Action Scenes are well executed. But Direction is not upto the mark. #Tamannaah looking so aged as Sex symbol.
⭐️⭐️ pic.twitter.com/l5ONw1kxxJ
— Umair Sandhu (@UmairSandu) August 6, 2023