Lal Salaam : ரஜினி – விஷ்ணு விஷால் நடிக்கும் ‘லால் சலாம்’… வெளியானது ‘ஏ புள்ள’ பாடலின் மேக்கிங் வீடியோ!

  • January 31, 2024 / 05:03 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘லால் சலாம்’, ‘வேட்டையன்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம்.

கெஸ்ட் ரோலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்களை ரிலீஸ் செய்தனர்.

இந்த டீசர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறவுள்ள ‘ஏ புள்ள’ பாடலின் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus