‘லால் சலாம்’ படத்தின் பாண்டிச்சேரி ஷெட்யூலில் கலந்து கொண்ட ரஜினி… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோஸ்!

  • June 2, 2023 / 08:39 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம்.

இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். சமீபத்தில், இப்படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயர் ‘மொய்தீன் பாய்’ என்று அறிவித்ததுடன், அவரின் கேரக்டர் போஸ்டரையும் ரிலீஸ் செய்தனர்.

தற்போது, இந்த படத்தின் புதிய ஷெட்யூல் ஷூட்டிங் நேற்று (ஜூன் 1-ஆம் தேதி) முதல் பாண்டிச்சேரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோஸ் மற்றும் ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus