தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கிவரும் ரஜினி நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1995 ஆம் வருடம் வெளியான திரைப்படம் தான் ‘முத்து’. இந்த திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.
தற்போது இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கவிதாலயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் மீனா மற்றும் சரத்பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் கதை சாதாரண மக்களை கூட உருக்கும் அளவிற்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் இந்த படத்திற்கு பலத்தை சேர்த்திருந்தனர்.
இந்த படத்தில் வரும் “தில்லானா தில்லானா” என்ற பாடலின் படப்பிடிப்பு குறித்து பேசியபோது கே.எஸ்.ரவிக்குமார், இந்த பாடலை கடைசியாக படம் பிடித்ததாகவும் ஒவ்வொரு நிற மாற்றத்திற்கும் ஒவ்வொரு நாள் எடுத்துக் கொண்டு செட்டை அமைத்து காட்சிகளை படமாக்கியதாகவும், இதற்காக இரவு பகல் பாராமல் அனைத்து டெக்னீசியன்களும் உழைத்தார்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்த பாடலுக்கு தருண் குமார் என்பவர் கோரியோகிராபி செய்திருந்தாராம் அவரின் வேண்டுகோளின் பேரில் தான் இந்த நிறமாற்றம் செய்யப்பட்ட செட் அமைக்கப்பட்டது. பிறகு இந்த செட் மிகவும் பிரபலமானதால், இதை ஹிந்தியில் ஒரு படத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.