தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’, இயக்குநர் த.செ.ஞானவேல் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’ கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. த.செ.ஞானவேல் இயக்கும் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கவுள்ளனர். இந்நிலையில், ரஜினி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ‘முத்து’ படத்தை வருகிற டிசம்பர் மாதம் அவரின் பர்த்டே ஸ்பெஷலாக ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்பாபு, செந்தில், ராதாரவி, வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர்.
https://twitter.com/KavithalayaaOff/status/1720674736500338719