தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘லால் சலாம்’, ‘வேட்டையன்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘லால் சலாம்’ படம் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ ரஜினியின் கேரியரில் 170-வது படமாம். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் 171-வது படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கவுள்ளனர்.
இந்நிலையில், ரஜினியின் புதிய படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை சஜித் நதியத்வாலாவே தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மிக விரைவில் இப்படத்தை இயக்கப்போவது யார்? என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
It's a true honour to collaborate with the legendary @rajinikanth Sir! Anticipation mounts as we prepare to embark on this unforgettable journey together!
– #SajidNadiadwala @WardaNadiadwala pic.twitter.com/pRtoBtTINs— Nadiadwala Grandson (@NGEMovies) February 27, 2024