Petta : “#5YearsofPetta”… வெளியானது ரஜினியின் ‘பேட்ட’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள்!

  • January 10, 2024 / 04:48 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘வேட்டையன், லால் சலாம்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என 3 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பேட்ட’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சசிக்குமார், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், த்ரிஷா, மாளவிகா மோகனன், சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருந்தார். இதற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

தற்போது, இந்த படம் வெளியாகி இன்றுடன் (ஜனவரி 10-ஆம் தேதி) 5 ஆண்டுகள் ஆகிவிட்டதால் ரஜினியின் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் ‘#5YearsofPetta’ என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில், ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus