Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • February 21, 2024 / 02:57 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘லால் சலாம்’, ‘வேட்டையன்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘லால் சலாம்’ படம் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ ரஜினியின் கேரியரில் 170-வது படமாம். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் 171-வது படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கவுள்ளனர்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘எந்திரன்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ், கலாபவன் மணி, டெல்லி குமார், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.45 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus