தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். ‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இவ்விரண்டு படங்களின் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
ரஜினி நடிப்பில் 1988-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கொடி பறக்குது’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா இயக்கியிருந்தார்.இதில் ரஜினிக்கு ஜோடியாக அமலா நடித்திருந்தார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் மணிவண்ணன், பாக்யலக்ஷ்மி, சுஜாதா, ஜனகராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இதற்கு ஹம்சலேகா இசையமைத்திருந்தார், பி.கண்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். தற்போது, இந்த படத்துக்காக நடிகர் ரஜினி ரூ.20 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.