Vettaiyan : ரஜினியின் ‘வேட்டையன்’… வெளியானது பொங்கல் ஸ்பெஷல் போஸ்டர்!

  • January 15, 2024 / 10:36 AM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘லால் சலாம்’, ‘வேட்டையன்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ ரஜினியின் கேரியரில் 170-வது படமாம். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினி போலீஸ் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய ரோல்களில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் புதிய போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus