தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.
இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார்.
‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் மிக முக்கிய ரோல்களில் பிரியங்கா மோகன், ஷிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற்றது.
இதன் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். படத்தை அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பாபா’. ரஜினியே கதை-திரைக்கதை எழுதி தயாரித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.
இதில் ஹீரோயினாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸானபோது ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் ஃப்ளாப்பானது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியுடன் இந்த படம் வெளி வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘#20YearsOfBaba’ என்ற ஹேஸ் டேக்கை ட்ரெண்ட் செய்தார்கள். தற்போது, இந்த படம் உலக அளவில் ரூ.18 கோடி வசூல் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.