தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது. ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அல்லது இயக்குநர் நெல்சன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
ரஜினியின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘சந்திரமுகி’. 2005-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரபல இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். ‘சந்திரமுகி’ என்ற பவர்ஃபுல்லான டைட்டில் ரோலில் ஜோதிகா நடித்திருந்தார். மேலும், பிரபு, வடிவேலு, நாசர், வினீத், மாளவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் உலக அளவில் ரூ.90 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.