ரஜினி – ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ஜானி’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • November 23, 2022 / 11:17 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார்.

‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘டான்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார்.’

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் 1980-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜானி’. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் இதனை இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் தீபா, பாலாஜி, சுருளி ராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். சூப்பர் ஹிட்டான இப்படத்தின் மொத்த வசூல் ரூ.60 லட்சமாம்.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus