சூப்பர் ஹிட்டான ‘பேட்ட’… இந்த படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • July 26, 2022 / 01:42 AM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார்.

‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பேட்ட’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சசிக்குமார், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், த்ரிஷா, மாளவிகா மோகனன், சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் ரஜினி ரூ.65 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus