ரஜினியின் வித்தியாசமான முடிவு !

  • January 12, 2023 / 10:28 AM IST

இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை . அண்ணாத்தே படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர் . இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

ஜெயிலர் படத்தின் சென்னையில் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது அதன் பிறகு கடலூரில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது . ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு , மலையாள நடிகர் விநாயகன் , தரமணி புகழ் வசந்த் ரவி ஆகியோர் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்கள் .

இந்நிலையில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . சில தினங்களுக்கு முன் ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது.

இது ஒரு பக்கம் இருக்க ரஜினியின் அடுத்த படம் பற்றின தகவல் வெளியாகி உள்ளது . நடிகர் ரஜினியை வைத்து மன்னன் , சந்திரமுகி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பி.வாசு அவர்கள் இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது .

கமல் ,விஜய் , அஜித் என முன்னணி நடிகர்கள் அனைவரும் இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் .ஆனால் ரஜினி மீண்டும் பி .வாசுவுடன் இணைவது குறித்து ரசிகர்கள் சற்று குழப்பான மனநிலையில் உள்ளனர் . மேலும் பி. வாசு அனுபவம் வாய்ந்த இயக்குநர் அதனால் நிச்சயம் அவர் சாதித்து காட்டுவார் என்றும் கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus