தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். பிரபல தயாரிப்பாளரின் மகனாக இருக்கும் விஷால், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.
விஷாலுக்கு முதல் படம் ‘செல்லமே’. அதன் பிறகு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, கதகளி, துப்பறிவாளன், இரும்புத் திரை, அயோக்யா, எனிமி, வீரமே வாகை சூடும்’ என படங்கள் குவிந்தது.
விஷாலின் படங்கள் அனைத்தும் தெலுங்கு மொழியிலும் ரிலீஸாவதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களிடமும் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சண்டக்கோழி’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2018-ஆம் ஆண்டு வெளியானது. இதில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ராஜ்கிரண், வரலக்ஷ்மி சரத்குமார், முனிஷ்காந்த், ஹரி கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இப்படத்திற்காக ராஜ்கிரண் ரூ.3 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.