மெடிக்கல் கடையில் மதுவிற்குமா என நக்கலாக கேட்ட ரகுல் ப்ரீத் சிங்..!

  • May 9, 2020 / 01:45 PM IST

தற்போது ஊரடங்கு சமயத்தில் அனைவரும் வீட்டிலிருந்தபடியே தங்களது நேரங்களை அதிகமாக சமூக வலைத்தளத்தில் செலவிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் என்று அனைத்திலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

Rakul Preti Questions about Liquor Sales1

ஊரடங்கு தளர்த்தப் பட்டு மது விற்பனையும் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து ஊடகங்களிலும் மது விற்பனையை குறித்த செய்திகளே அதிகமாக உலா வருகிறது. தமிழக குடிமகன்கள் வெயில் என பாராமல் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் சில பாட்டிலுடன் சாலையில் நடந்து செல்லும் வீடியோ இணையதளத்தில் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..

https://twitter.com/Rakulpreet/status/1258365705084375040?s=20

சமூகவலைதளத்தில் அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர் ஒருவர் இந்த ஊரடங்கு சமயத்தில் ரகுல் பிரீத் சிங் ஆல்கஹால் வாங்கி செல்கிறாரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு பதிலளித்த ரகுல் பிரீத் சிங் “மெடிக்கல் ஷாப்பில் நீங்கள் ஆல்கஹால் விற்பீர்களா? என்று பதில் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் அவர் மெடிக்கல் ஷாப்பில் இருந்து அத்தியாவசிய மருந்துகளை தான் அந்த வீடியோவில் வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus