சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை இல்லத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
சுஷாந்த் சிங் மன அழுத்தத்தில் இருந்த பொழுது அவருக்கு மேலும் கஷ்டம் கொடுத்து, மேலும் ஒரு கட்டத்தில் மிரட்டி சுஷாந்தின் உடைமைகளை கைப்பற்றியும் சென்றுள்ளாராம் ரியாசக்கரவர்த்தி.
இந்த வழக்கில் கைதான ரியா சக்கரவர்த்தி மீது போதைப்பொருள் தடுப்பு சட்டம் ரீதியிலும் வழக்கு பதியப்பட்டது. இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ள ரியா சக்கரவர்த்தி, பிரபல பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என சினிமா துறையை சார்ந்த பல முன்னணி பிரபலங்களுக்கு இதில் தொடர்புள்ளதாக கூறியுள்ளாராம்.
இதன் அடிப்படையில் சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் அதை முதலில் மறுத்திருந்தார். தற்போது தனக்கு சம்மன் வந்ததை ஒப்புக்கொண்டு மும்பையில் நேரில் சென்று ஆஜராவதற்கு தயாராக இருக்கிறாராம்.