ரகுல் பிரீத் சிங் ஆஜராக வேண்டும் – NCB உத்தரவு!

  • September 24, 2020 / 02:00 PM IST

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் பிரீத் சிங் தன்னுடைய சோசியல் மீடியா தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர்.

2012ஆம் ஆண்டு மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான “தடையற தாக்க” எனும் தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 2017 ஆம் ஆண்டு வெளியான “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்தார்.

தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “அயலான்” படத்தில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். மேலும் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2″படத்திலும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி 2 இந்தி படங்களிலும் நடித்து வரும் ராகுல் ப்ரீத் சிங் தற்போது
சுஷாந்த் சிங் வழக்கில் தற்போது பிரச்சனைக்கு உள்ளாகிய போதைபொருள் வழக்கில் சிக்கியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். இவர் தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாராஅலி கான் உள்ளிட்டோரை மூன்று நாட்களுக்குள் மும்பையில் ஆஜராக வேண்டுமென்று என்சிபி உத்தரவிட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus