என்.ஜி.கே படத்திற்காக ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?

  • October 17, 2022 / 11:41 PM IST

2019 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான அரசியல் திரைப்படம் NGK . இந்த படத்தில் சூர்யா, சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்து இருந்தனர் . தேவராஜ், பொன்வண்ணன், நிழல்கள் ரவி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார் . சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்து இருந்தார் . இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்து இருந்தார்.

இந்த படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகள் ஜனவரி 2018 இல் தொடங்கியது. 31 மே 2019 அன்று இந்த படம் திரைக்கு வந்தது . செல்வராகவன் மற்றும் சூர்யா இருவரும் முதன் முதலாக இணைந்த காரணத்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது . மேலும் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் செல்வராகவன் நீண்ட இடைவெளிக்கு பிறகு சேர்ந்து படத்தில் பணியாற்றிய காரணமாகவும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது .

ஆனால் படம் வெளியான பின் சரியான வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை . கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்றது . இந்நிலையில் இந்த படத்தில் முதன்மையான பாத்திரத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் 1 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று உள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus