பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் முழுமையான கொரோனா பாதுகாப்பு கவசம் அணிந்து பயணம் செய்ய வந்திருந்தார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ரகுல் ப்ரீத் சிங் கொரோனா லாக்டவுன் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அவரது சகோதரர் இல்லத்தில் தங்கியிருந்தார். தற்போது ஐந்தாம் கட்ட தளர்வை அரசு அறிவித்திருந்த நிலையில் உள்நாட்டு விமானங்கள் இயங்கத் தொடங்கின. அதையடுத்து அவர் டெல்லியில் உள்ள தனது தாய் தந்தை வீட்டிற்கு செல்வதற்காக விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்தார். அப்போது அவர் கொரோனா பாதுகாப்பு கவசம் முழுமையாக அணிந்து சென்றார்.
இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து கொண்டு அவர் “லாக்டவுன் தளர்வு உள்ளதால் பயணம் செய்ய முடிவு செய்தேன் .ஆனால் அங்கு வசிக்கும் என் தாய் தந்தை பாதுகாப்பு கருதி PPE உடையில் செல்ல முடிவு செய்தேன்.இந்த உடையில் ஒரு விண்வெளி பணியாளர் போல தோன்றுகிறது , நான் தாய் தந்தையை கட்டிக்கொள்வதற்கு முன் 14 நாட்கள் குவாரண்டைனில் இருப்பேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
மும்பை விமான நிலையத்தில் இவரோடு, இயக்குனர் லக்ஷயா ராஜ் ஆனந்த் பயணம் செய்தார். இவர் ரகுலின் அடுத்த படமான “அட்டேக் ” யின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் ரகுல் பிரீத் சிங்குடன் ஜான் ஆப்ரஹாம் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.