நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

  • June 30, 2021 / 07:37 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமாவில் பல டாப் ஹீரோக்களுடன் டூயட் பாடிய ரகுல் ப்ரீத் சிங், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆரம்பத்தில் நடித்த ‘புத்தகம், என்னமோ ஏதோ’ போன்ற தமிழ் படங்கள் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பெரிதாக க்ளிக் ஆக வில்லை.

அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ மற்றும் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய இரண்டு படங்களும் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்புக்கு கோலிவுட் ஆடியன்ஸை லைக்ஸ் போட வைத்தது. இவ்விரண்டு படங்களுக்கு பிறகு ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தேவ், NGK’ என தமிழ் படங்கள் குவிந்தது.

Rakul Preet Singh's Hot Bikini Picture 1

ரகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். பிகினி உடை அணிந்து ரகுல் ப்ரீத் சிங் நீச்சல் குளத்தில் குளித்தபடி போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்லை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus