போதைப்பொருள் விவகாரத்தில் வாக்குமூலம் அளித்துள்ள ரகுல் பிரீத் சிங்!

சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை இல்லத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைதான ரியா சக்கரவர்த்தி மீது போதைப்பொருள் தடுப்பு சட்டம் ரீதியிலும் வழக்கு பதியப்பட்டது. இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ள ரியா சக்கரவர்த்தி, பிரபல பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என சினிமா துறையை சார்ந்த பல முன்னணி பிரபலங்களுக்கு இதில் தொடர்புள்ளதாக கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் அதை முதலில் மறுத்திருந்தார். தற்போது தனக்கு சம்மன் வந்ததை ஒப்புக்கொண்டு மும்பையில் நேரில் ஆஜரான இவருடன் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் ரியா சக்கரவர்த்தியுடன் தனக்கு இருந்த போதைப்பொருள் தொடர்பான உரையாடல்கள் உண்மைதான் என்றும், ஆனால் தனக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் சம்பந்தமில்லை என்றும், தான் எந்த போதைப் பொருளையும் உட்கொள்ளவில்லை என்றும் வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

Share.