தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் பிரீத் சிங் தன்னுடைய சோசியல் மீடியா தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர்.
2012ஆம் ஆண்டு மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான “தடையற தாக்க” எனும் தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 2017 ஆம் ஆண்டு வெளியான “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்தார்.
தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “அயலான்” படத்தில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். மேலும் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2″படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து வெளியிட்டுள்ள வீடியோ இணையதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
Here’s a video of @Rakulpreet working hard in the gym pic.twitter.com/kPdOSlXKK1
— Chennai Times (@ChennaiTimesTOI) December 16, 2020