மாலத்தீவுக்கு தனது மனைவியுடன் சுற்றுலா சென்ற ‘RRR’ ஹீரோ ராம் சரண்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • April 11, 2023 / 06:41 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ராம் சரண். ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் மகனாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார் ராம் சரண். இவர் ஹீரோவாக நடித்த முதல் தெலுங்கு படம் ‘சிறுத்தா’.

இந்த படத்துக்கு பிறகு பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘மகதீரா’ என்ற படத்தில் நடித்தார். இப்படம் தமிழிலும் ‘மாவீரன்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு ராம் சரணுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு படங்கள் குவிந்தது.

ராம் சரண் நடித்த கடைசி படமான ‘RRR’ கடந்த ஆண்டு (2022) வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்த இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்தார். இப்போது ராம் சரண் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ராம் சரண் தனது மனைவி உபாசனாவுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus