விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா ! உயர் சிகிச்சையில் ரம்பாவின் மகள் !

  • November 1, 2022 / 11:27 AM IST

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோருடன் நடித்துள்ளார். 2010 இல், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரனை மணந்தார். அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் நடிப்பது இல்லை .

நடிகை ரம்பா தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீடு திரும்பும் போது கார் விபத்தில் படுகாயம் அடைந்து உள்ளார் . சேதமடைந்த காரின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு உள்ளார் . அதில் அவர்கள் அனைவரும் சிறிய காயங்களுடன் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் . எனினும், அவரது மகள் சாஷா மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மகள் சாஷா விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு ரம்பா கேட்டுக் கொண்டார்.

நடிகர் ரம்பாவின் மகள் சாஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . ரம்பாவுக்கு விபத்து ஏற்பட்ட செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் ரம்பாவின் மகள் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus