“ஹவுஸ்மேட்ஸுடன் ஆரிக்கு கருத்து வேறுபாடு இருக்கு”ன்னு சொன்ன ரம்யா… ‘பிக் பாஸ் 4’ புது ப்ரோமோ!
January 7, 2021 / 04:28 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா மற்றும் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டனர். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆஜித் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் டாஸ்கின் போது ஒரு கார்டில் இருக்கும் வாசகத்தை படிக்கும் ரம்யா பாண்டியன் “தேசத்தோடு ஒட்டி வாழ். இதை ஆரிக்கு தான் கொடுக்குறேன். 8 பேர் இருந்தாலும், 7 பேரோட அவருக்கு கருத்து வேறுபாடு இருக்கு. so, அப்படி கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒட்டி வாழ்ந்திருக்கலாம். but, அதை அவர் பண்ணல” என்று சொல்கிறார்.
அதன் பிறகு மற்றொரு கார்டில் இருக்கும் வாசகத்தை படிக்கும் பாலாஜி முருகதாஸ் “துன்பம் மறந்து வாழ். நான் இதை கண்டிப்பா ஆரி அண்ணனுக்கு தான் கொடுப்பேன். அவர் விளையாடின முறை எனக்கு பிடிக்கும்ங்குறது தான். அது என்னோட கருத்து. நமக்குள்ள வந்த சண்டைல, அடுத்த நாள் சகஜமாக மாறிடுவாறு. எவ்ளோ துன்பம் இருந்தாலும், you have been yourself. இன்னைக்கு காலைல நடக்குதுன்னா, evening-ஏ அது இருக்காது உங்ககிட்ட அந்த ஒரு விஷயத்துக்காக” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.