சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படம் ‘வெள்ளை மனசு’. இதில் ஹீரோவாக YG.மகேந்திரன் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் சித்ராலயா கோபு இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘படிக்காதவன், பார்த்த ஞாபகம் இல்லையோ, சர்வம் சக்திமயம், பேர் சொல்லும் பிள்ளை, தம்பி தங்ககம்பி, நல்ல காலம் பொறந்தாச்சு, சிகரம், கேப்டன் பிரபாகரன், வானமே எல்லை, படையப்பா, பாட்டாளி, ராஜகாளி அம்மன், பட்ஜெட் பத்மநாபன், அசத்தல், பஞ்சதந்திரம், ஜூலி கணபதி, பாறை, ஆம்பள, பாகுபலி 1 & 2, தானா சேர்ந்த கூட்டம், வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ், சூப்பர் டீலக்ஸ்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2003-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இப்போது, ரம்யா கிருஷ்ணனின் நடிப்பில் தமிழில் ‘பார்ட்டி’, தெலுங்கில் ‘லைகர்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
ரம்யா கிருஷ்ணனின் கேரியரில் மிக முக்கியமான படங்கள் ‘பாகுபலி 1 & 2’. இதனை டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த இதில் மிக முக்கிய ரோல்களில் அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, நாசர், சத்யராஜ், ரானா டகுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ‘சிவகாமி தேவி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். தற்போது, நடிகை ரம்யா கிருஷ்ணன் ‘பாகுபலி 1’-க்காக ரூ.1.5 கோடியும், ‘பாகுபலி 2’-க்காக ரூ.2.5 கோடியும் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.