வெளியான ரம்யா நம்பீசன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்!

  • December 4, 2020 / 09:59 PM IST

தமிழ் சினிமாவில் 2006ஆம் ஆண்டு வெளியான “ஒரு நாள் ஒரு கனவு” என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன்.

ஏற்கனவே மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் இவர் தமிழில் இந்த படத்தை தொடர்ந்து ராமன் தேடிய சீதை, குள்ளநரிக்கூட்டம், பீட்சா, சேதுபதி, சத்யா, நட்புன்னா என்னன்னு தெரியுமா போன்ற பிரபலமான படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் தக்க வைத்துக் கொண்டார்.

இவர் தமிழ் மற்றும் மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தமிழரசன், ரேஞ்சர், ஆலம்பனா, பிளான் பண்ணி பண்ணனும் போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன் அடுத்த ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது இவர் வெற்றி துரைசாமி இயக்கத்தில் நடிகர் விதார்த்துடன் இணைந்து “என்றாவது ஒரு நாள்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அது தற்போது வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus