ரன்பீர் கபூரின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘அனிமல்’ படத்தின் டீசர்!

  • September 28, 2023 / 01:04 PM IST

பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அனிமல்’ (ANIMAL). இந்த படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி வருகிறார்.

இதில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அணில் கபூர், பாபி தியோல், பப்லு ப்ரித்விராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதன் பாடல்களுக்கு ப்ரிதம், விஷால் மிஸ்ரா, மணன் பரத்வாஜ், ஸ்ரேயாஸ் புரானிக், ஜானி, அஷிம் கேம்சன், குரிந்தர் சேகல் இசையமைத்து வருகின்றனர், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பின்னணி இசையமைத்து வருகிறார், அமித் ராய் ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்று ரன்பீர் கபூரின் பர்த்டே ஸ்பெஷலாக இப்படத்தின் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus