ட்ரெண்டிங்கில் விஜய்யின் ” ரஞ்சிதமே ரஞ்சிதமே ” பாடல் !

  • February 6, 2023 / 01:47 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார் .

ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி தமிழில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது . தெலுங்கு மொழியில் பெரிதும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தெலுங்கு ரசிகர்களும் இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பை தரவில்லை .

இந்நிலையில் வாரிசு படத்தில் இடம்பெற்ற ” ரஞ்சிதமே ரஞ்சிதமே ” என்கிற பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தற்போது இந்த பாடல் யூடியூபில் ட்ரெண்ட் ஆகி வருகிறது .

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus