சிவாஜி கணேசனுடன் ரஜினி இருக்கும் அறிய புகைப்படம் !சிவாஜி கணேசனுடன் ரஜினி இருக்கும் அறிய புகைப்படம் !

  • December 22, 2022 / 02:17 AM IST

தமிழ் சினிமாவில் நாற்பது படங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .
சூப்பர்ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான படம் மன்னன் . இந்த படத்தை
பி. வாசு எழுதி இயக்கி இருந்தார் . இப்படத்தில் , விஜயசாந்தி, குஷ்பு ஆகியோர் முக்கியாமான வேடத்தில் நடித்து இருந்தனர் . மன்னன் படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது .

தற்போது மன்னன் படத்தின் வெற்றிவிழாவில் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவி வருகிறது . இந்த புகைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் , நடிகர் பிரபு , நடிகைகள் குஷ்பு , விஜயசாந்தி மற்றும் இயக்குநர் பி,வாசு ஆகியோர் உள்ளனர் . தற்போது இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus