சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும் அரிய புகைப்படம் !

  • February 8, 2023 / 10:24 AM IST

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் .பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடித்து வருகின்றனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் .

சமீபத்தில் இந்தியன் 2 படத்தில் ஒரு பாடலுக்கு ” ஆர் .ஆர்.ஆர் ” படத்தில் ” நாட்டு நாட்டு ” பாடலுக்கு நடனமைத்த பிரேம் ரக்ஷித் நடனமைக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது . திருப்பதியில் நடிகர் கமல் பிஸியாக நடித்து வருகிறார் .

இந்நிலையில் த நடிகர் கமலின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது . இதில் நடிகர் கமல் சத்யா பட கெட்டப்பில் இருக்கிறார் . இந்த புகைப்படத்தில் நடிகர் கமலுடன் நாகார்ஜுனா ,சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் உள்ளனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus