வைரலாகும் நடிகை மஞ்சு வாரியரின் அரியப் புகைப்படம் !

  • January 21, 2023 / 07:46 PM IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர் , இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார் . இந்த படத்தில் மஞ்சு வாரியரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் மஞ்சு வாரியர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது .

ஆனால் அசுரன் படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் மஞ்சு வாரியர் நடிக்கவில்லை . நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் வெளியான துணிவு படத்தில் நடித்து இருந்தார் மஞ்சு வாரியர் . நடிகர் அஜித் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மஞ்சு முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருந்தார் . பல காட்சிகளில் இவர் ஆடியன்ஸ் களிடமிருந்து கை தட்டல் பெற்றார் .

துணிவு படத்திற்கு பிறகு மஞ்சு வாரியரின் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது , இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியரின் சின்ன வயது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus