இதுவரை யாரும் பார்த்திராத “பிக் பாஸ் 4” நடிகை ரம்யா பாண்டியனின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • October 12, 2020 / 06:13 PM IST

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் யார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பலரும் இவர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவ்வப்போது ஏதேனும் ஒரு பிரபலத்தின் பெயரை வெளியிட்டு வந்தார்கள்.

மொத்தம் 105 நாட்கள் இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியது. இதில் 16 பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, நடிகர் பாலாஜி முருகதாஸ், நடிகை சிவானி நாராயணன், செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத், பாடகர் வேல்முருகன், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, நகைச்சுவை பேச்சாளர் அறந்தாங்கி நிஷா, நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, நடிகை சமயுக்தா கார்த்திக், நடிகை ரம்யா பாண்டியன, சூப்பர் சிங்கர் ஆஜித் உள்ளிட்ட 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

பிரபல இயக்குனரான மணிரத்னம் அவர்களின் சிஷ்யன் ஷெல்லி இயக்கத்தில் உருவாகவிருந்த “மானே தேனே பொன்மானே” என்ற குறும்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ரம்யா பாண்டியனுக்கு கிடைத்ததாம். ஆனால் சில காரணங்களால் தட்டிப் போன இந்த வாய்ப்பை தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு வெளியான “டம்மி டப்பாசு” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ரம்யா பாண்டியன். இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு குரு சோமசுந்தரத்தின் ஜோடியாக “ஜோக்கர்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு “ஆண் தேவதை” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களின் மூலம் தமிழில் தனக்கென தனி இடத்தை தக்க வைக்க முயற்சி செய்து வந்த ரம்யா பாண்டியன் 2019ஆம் ஆண்டு விஜய் டிவியில்‌ “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக உள்ளே வந்தார். இதைதொடர்ந்து “கலக்கப்போவது யாரு சீசன் 9″இல் நடுவராக இருந்தார். இதன் மூலம் மக்களிடையே பரிட்சையைப்படும் முகமாக இருந்த ரம்யா பாண்டியன் தற்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளர். அதுமட்டுமின்றி 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிப்பதற்கு இவர் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிக்கவிருக்கும் காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் நெருங்கிய உறவினராவார். இதோ அவரின் அரிய புகைப்படத் தொகுப்பு!

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

38

29

30

31

32

33

34

35

36

37

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus