தமிழ் , தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் ராஷ்மிகா. தற்போது இவர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து உள்ளார் . பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் நடித்திருந்த குட்பை திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மிஷன் மஜ்னு என்ற இந்தி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராஷ்மிகா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விழாவில் பேசிய ராஷ்மிகா, தென்னிந்திய திரைப்படங்களில் மசாலா சாங்ஸ், ஐட்டம் பாடல்கள் போன்ற டான்ஸ் மோடில் தான் பாடல்கள் வருகின்றன எனக் கூறியுள்ளார். மேலும், பாலிவுட்டில் தான் மெலடியான ரொமாண்டிக் பாடல்கள் வருகின்றன. மிஷன் மஜ்னு படத்தில் அப்படி நான் எதிர்பார்த்த ரொமாண்டிக் சாங் உள்ளது. அதனை கேட்க நான் ஆவலாக உள்ளேன், நீங்களும் கண்டிப்பாக கேட்டுப் பாருங்கள் என பேசி உள்ளார் .
ராஷ்மிகாவின் இந்த கருத்து சர்ச்சையாகியுள்ளது. பலரும் தற்போது ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .