நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு ( தளபதி 66) படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு சென்னை , ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது .
இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது .
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் . அதில் நான் சினிமாவிற்கு வந்ததிலிருந்தே என்னை சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்வது , நான் சொல்லாத சில விஷயங்களை பொய்யாக பரப்புகின்றனர் இது மனதை மிகவும் காயப்படுத்துகிறது இருந்தும் சந்தோஷத்திற்காக நான் கடுமையாக உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார் .