விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய ராஷ்மிகா!

  • April 1, 2023 / 01:25 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு அமைந்த முதல் கன்னட படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிரிக் பார்ட்டி’. அதன் பிறகு தெலுங்கில் இவருக்கு அமைந்த முதல் படமும் மெகா ஹிட்டானது. அது தான் ‘கீதா கோவிந்தம்’.

விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் தான் ராஷ்மிகா மந்தனாவை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸ் ஆக்கியது. ராஷ்மிகா தமிழில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் தான். அது தான் ‘சுல்தான்’.

சமீபத்தில், ராஷ்மிகா நடிப்பில் வெளியான துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’, ‘தளபதி’ விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. இப்போது, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் ஒரு படமும், தெலுங்கில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ‘வாரிசு’ படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்தியுள்ளார் ராஷ்மிகா.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus