Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’-க்காக ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • November 30, 2023 / 03:57 PM IST

பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனிமல்’ (ANIMAL). இந்த படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார்.

இதில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அணில் கபூர், பாபி தியோல், பப்லு ப்ரித்விராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் பாடல்களுக்கு ப்ரிதம், விஷால் மிஸ்ரா, மணன் பரத்வாஜ், ஸ்ரேயாஸ் புரானிக், ஜானி, அஷிம் கேம்சன், குரிந்தர் சேகல் இசையமைத்துள்ளனர், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பின்னணி இசையமைத்துள்ளார், அமித் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை நாளை (டிசம்பர் 1-ஆம் தேதி) ஹிந்தி மொழி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்துக்காக ராஷ்மிகா ரூ.4 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus