“என்னடா பண்ணி வச்சுருக்கீங்க என் செல்லத்தை”… ராஷ்மிகாவின் ஸ்டில்லை பார்த்து கொந்தளிக்கும் ரசிகர்கள்!

  • April 20, 2021 / 05:23 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு அமைந்த முதல் கன்னட படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிரிக் பார்ட்டி’. அதன் பிறகு தெலுங்கில் இவருக்கு அமைந்த முதல் படமும் மெகா ஹிட்டானது. அது தான் ‘கீதா கோவிந்தம்’.

விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் தான் ராஷ்மிகா மந்தனாவை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸ் ஆக்கியது. ராஷ்மிகா தமிழில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் தான். அது தான் ‘சுல்தான்’. இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படம் சமீபத்தில் ரிலீஸானது. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்போது, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் இரண்டு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், போட்டோஷாப் மூலம் ராஷ்மிகா மந்தனாவுக்கு மொட்டை அடித்து ஒரு சலூன் கடையில் விளம்பர பலகை வைக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்த்த நடிகை ராஷ்மிகாவின் ரசிகர்கள் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பர பலகையை வைத்து பல மீம்ஸ் வைரலாகி வருகிறது.

1

2

3

4

5

6

7

8

9

10

11

 

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus