Rashmika Mandanna : சமூக வலைத்தளத்தில் வைரலான டீப் ஃபேக் வீடியோ… கொந்தளித்த ராஷ்மிகா மந்தனா!

  • November 7, 2023 / 11:22 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு அமைந்த முதல் கன்னட படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிரிக் பார்ட்டி’. அதன் பிறகு தெலுங்கில் இவருக்கு அமைந்த முதல் படமும் மெகா ஹிட்டானது. அது தான் ‘கீதா கோவிந்தம்’.

விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் தான் ராஷ்மிகா மந்தனாவை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸ் ஆக்கியது. ராஷ்மிகா தமிழில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் தான். அது தான் ‘சுல்தான்’.

 

சமீபத்தில், ராஷ்மிகா நடிப்பில் வெளியான துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’, ‘தளபதி’ விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. இப்போது, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் ஒரு படமும், தெலுங்கில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், ஒரு படு கவர்ச்சியான வீடியோ ஒன்று டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் ராஷ்மிகாவின் முக அமைப்பைக் கொண்டு வெளியாகி வைரலானது. இந்த வீடியோவுக்கு அதிருப்தி தெரிவித்து ராஷ்மிகா ட்வீட் போட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus