நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

  • April 6, 2023 / 12:00 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு அமைந்த முதல் கன்னட படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிரிக் பார்ட்டி’. அதன் பிறகு தெலுங்கில் இவருக்கு அமைந்த முதல் படமும் மெகா ஹிட்டானது. அது தான் ‘கீதா கோவிந்தம்’.

விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் தான் ராஷ்மிகா மந்தனாவை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸ் ஆக்கியது. ராஷ்மிகா தமிழில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் தான். அது தான் ‘சுல்தான்’.

சமீபத்தில், ராஷ்மிகா நடிப்பில் வெளியான துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’, ‘தளபதி’ விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. இப்போது, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் ஒரு படமும், தெலுங்கில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 5-ஆம் தேதி) நடிகை ராஷ்மிகாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோஸ் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus