சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு அமைந்த முதல் கன்னட படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிரிக் பார்ட்டி’. அதன் பிறகு தெலுங்கில் இவருக்கு அமைந்த முதல் படமும் மெகா ஹிட்டானது. அது தான் ‘கீதா கோவிந்தம்’.
விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் தான் ராஷ்மிகா மந்தனாவை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸ் ஆக்கியது. ராஷ்மிகா தமிழில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் தான். அது தான் ‘சுல்தான்’.
பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாக்யராஜ் கண்ணன் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, நெப்போலியன், லால், ஹரிஷ் பெராடி, ராமச்சந்திர ராஜு மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்காக ராஷ்மிகா ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கினாராம்.
இப்போது ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் இரண்டு படங்களும், தெலுங்கில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது. இது தவிர வம்சி இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் நடிக்கும் ‘வாரிசு’ (தமிழ் / தெலுங்கு) படத்திலும் ராஷ்மிகா நடித்து கொண்டிருக்கிறார்.