விஜய்யுடன் செலஃபீ எடுத்த ராஷ்மிகா ! காட்டுத்தீயாக பரவும் வீடியோ !

  • September 14, 2022 / 08:13 PM IST

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது .

இந்த படம் வரும் பொங்கலுக்கு வரும் என்று படக்குழு அறிவித்து இருந்தது படக்குழு .அடிக்கடி வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருந்து வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்தது . இந்நிலையில் படத்தின் நாயகி ராஷ்மிகா நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது காட்டுத்தீயாக வைரலாகி வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus