சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு அமைந்த முதல் கன்னட படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிரிக் பார்ட்டி’. அதன் பிறகு தெலுங்கில் இவருக்கு அமைந்த முதல் படமும் மெகா ஹிட்டானது. அது தான் ‘கீதா கோவிந்தம்’.
விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் தான் ராஷ்மிகா மந்தனாவை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸ் ஆக்கியது. ராஷ்மிகா தமிழில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் தான். அது தான் ‘சுல்தான்’. இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படம் சமீபத்தில் ரிலீஸானது.
Rashmika’s Insta Post About Acting With Vijay1
இப்போது, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் இரண்டு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் “எப்போது நடிகர் ‘தளபதி’ விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்கள்?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ராஷ்மிகா “மிக விரைவில்” என்று பதில் கூறியுள்ளார்.
Actress #RashmikaMandanna about Thalapathy.
L O V E ❤️ #Master @actorvijay #Beast pic.twitter.com/DWyybrcUQT
— Vijay Fans Updates (@VijayFansUpdate) June 29, 2021